என்ன ஒரு திமிர்..! ஆம்புலன்ஸ் சைரன் கேட்டாலும் அசரல.. கார் மேல ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்..! வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன ஒரு திமிர்..! ஆம்புலன்ஸ் சைரன் கேட்டாலும் அசரல.. கார் மேல ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்..! வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்ஸ்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாபுகர் பகுதியின் பச்ரவுதா கிராமத்தில், இரண்டு சொகுசு கார்களில் இளைஞர்கள் ஒரு குழுவாக சென்றனர். அவர்கள் சாலையில் செல்லும் வழியை மறித்துக்கொண்டு தங்களுடைய கார்களை நடுவழியில் நிறுத்தி இருந்தனர். பின்னர் கார்களின் கூரையின் மீது ஏறிக்கொண்டு அவர்கள் நடனமாடியபடியும், பாட்டு பாடியபடியும் இருந்தனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியே நோயாளியை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட இரண்டு ஆம்புலன்சுகள் வந்தன. சைரன்களை ஒலித்தபடி அந்த ஆம்புலன்சுகள் நீண்ட நேரம் நின்றிருந்தன. எனினும், அந்த வாகனங்களில் இருந்தவர்கள் வழிவிட மறுத்து, தொடர்ந்து நடனம் ஆடியபடியே காணப்பட்டனர். அவசர சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை உணராமல் அவர்கள் செய்த இந்த அத்துமீறல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களின் அலட்சியத்தையும், பொறுப்பற்ற செயலையும் கடுமையாக கண்டித்துள்ளனர். சாலையில் அவசர ஊர்திகளுக்கு வழிவிடாமல் இதுபோன்று சாகசங்களிலும், நடனத்திலும் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in