“20 நாள்தான் ஆச்சு… என் குழந்தையைக் கொன்னுட்டாங்க..” டி.ஜே. சத்தத்தால் துடிதுடித்து பறிபோன 20 நாள் பச்சிளம் குழந்தை.. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“20 நாள்தான் ஆச்சு… என் குழந்தையைக் கொன்னுட்டாங்க..” டி.ஜே. சத்தத்தால் துடிதுடித்து பறிபோன 20 நாள் பச்சிளம் குழந்தை.. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மனியர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதியாரி கிராமத்தில், சாமி சிலை நிமஞ்சனத்தின் போது ஒலித்த டி.ஜே. இசையின் அதிக சத்தத்தால் 20 நாள் கைக் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. டி.ஜே.யின் அதிகப்படியான சத்தம் காரணமாகவே குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உறவினர்களின் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டி.ஜே.யைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதியாரி கிராமத்தைச் சேர்ந்த ரீமா தேவி என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனது தாய்வீட்டிற்கு வந்துள்ளார். சுமார் 20 நாட்களுக்கு முன்புதான் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ரீமா தேவி தனது பச்சிளம் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிராமத்தில் சிலை நிமஞ்சன ஊர்வலமாகச் சென்றவர்கள் அவர்களின் வீட்டருகே டி.ஜே. வாகனத்தை நிறுத்திவிட்டு மிகைப்படுத்தப்பட்ட அதிக ஒலியில் பாடல்களை இயக்கத் தொடங்கினர். டி.ஜே.யின் சத்தம் காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. குடும்பத்தினர் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டும், அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இசைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே குழந்தையின் இதயத்துடிப்பு நின்று அது பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பலியா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய் சங்கர் மிஸ்ரா கூறுகையில், உறவினர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டி.ஜே. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். முழுமையான விசாரணைக்குப் பின்னரே குழந்தையின் இறப்புக்கான உண்மையான காரணம் உறுதியாகத் தெரியவரும் என்றாலும், பச்சிளம் குழந்தை இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in