“காதலனைத்தான் கல்யாணம் செய்வேன்..” என்று ஆடம் பிடித்த மகள்.. தூங்கிக் கொண்டிருந்த போது தந்தையே செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“காதலனைத்தான் கல்யாணம் செய்வேன்..” என்று ஆடம் பிடித்த மகள்.. தூங்கிக் கொண்டிருந்த போது தந்தையே செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் போன்கான் நகரில், தான் நிச்சயித்த நபரைத் திருமணம் செய்ய மறுத்து, காதலித்தவரையே திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்ற 19 வயது மகளை, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்ற தந்தையே தலையில் சுட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திங்கட்கிழமை அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த இளம் பெண் தலைப்பகுதியில் மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார். தனது பேச்சைக் கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் 48 வயதான அந்தத் தந்தை இந்த விபரீத துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகப் போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மெயின்புரி நாட்டுப் போலீசார், சொந்த மகளையே கௌரவக் கொலை செய்ய முயன்ற அந்தத் தந்தையைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in