CRIME
“அடிப்பாவி.. வாடகை ஒப்பந்தம் எனச் சொல்லி வாங்கிய கையெழுத்து..” 8 மாதங்களுக்குப் பிறகு முதியவருக்குக் காத்திருந்த இடி.. பெண் செய்த கொடூர சதி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வடச்சி வாடி பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ் உகலே (62) என்ற முதியவரை, அவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த பெண் ஒருவர் ஏமாற்றி, அவரது 17 குந்தா நிலம் மற்றும் வீட்டைப் பறித்துக் கொண்ட கொடூர மோசடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2023-24 ஆம் ஆண்டில், ஒரு குடும்பத்தினர் ராம்தாஸ் உகலேயின் வீட்டில் உள்ள சில அறைகள் மற்றும் காலி இடத்தை மாதம் 20,000 ரூபாய் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். அந்தப் பெண்ணை “தாய்” என்று அழைத்து வந்த முதியவர், அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். வாடகை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ராம்தாஸ் உகலே தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அதைத் தவிர்த்து வந்துள்ளனர்.
பின்னர் 2024-ஆம் ஆண்டில், வாடகை ஒப்பந்தம் செய்வதாகக் கூறி முதியவரை ஹவேலி எண் 7 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண், ராம்தாஸ் உகலேயின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, அவரிடம் படிக்கக் கொடுக்காமல் 17 குந்தா நிலத்திற்கான நேரடி விற்பனைப் பத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்துப் பெற்றுள்ளார். இந்த மோசடி நடந்து முழுமையாக எட்டு மாதங்களுக்குப் பிறகு, நிலத்தின் 7/12 ஆவணங்களில் அந்தப் பெண்ணின் பெயர் பதிவான போதே முதியவருக்கு உண்மை தெரியவந்தது. இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற முதியவரை, காலே பாடல் காவல் நிலைய அதிகாரி ஒருவர் சட்டத்தைக் காட்டி மிரட்டி அவரது சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றியுள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த முதியவர் சில நாட்கள் நடைபாதையிலேயே தூங்கியுள்ளார்.
தற்போது குடிசைப் பகுதி ஒன்றில் வசித்து வரும் ராம்தாஸ் உகலே, தனது சொத்துக்களைப் பறிகொடுத்துவிட்டுப் புனே மாநகரக் காவல் ஆணையரிடம் மூன்று முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தத் திட்டமிட்ட நில அபகரிப்புச் சதியில் அப்போதைய ஹவேலி எண் 7 சார்பதிவாளர் மற்றும் காலே பாடல் காவல் நிலைய அதிகாரிகளுக்குப் பெரிய அளவில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அம்மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ், புனே மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜிதேந்திர துடி மற்றும் புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தீவிர விசாரணை நடத்தி முதியவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
