நயினார் நாகேந்திரனை ஏன் இன்னும் கைது செய்யல..? அவருக்கு மட்டும் தனிச் சட்டமா?.. தவெக-வை சராமாரியாக சாடிய கனிமொழி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயினார் நாகேந்திரனை ஏன் இன்னும் கைது செய்யல..? அவருக்கு மட்டும் தனிச் சட்டமா?.. தவெக-வை சராமாரியாக சாடிய கனிமொழி..!!

Published

on

நயினார் நாகேந்திரன் மீது மட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை பாயவில்லை என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் மனம் புண்படும்படி எது நடந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். ஆனால், அதே முதலமைச்சைத் தனிப்பட்ட விதத்தில் கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தைரியம் இருக்கிறதா என்றும் காட்டமாகக் கேட்டார்.

மேலும் தொடர்ந்த அவர், மற்ற எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து தவெக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கடுமையாகச் சாடினார். முதலமைச்சருக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா என்ற கோணத்தில் அரசின் இந்த இரட்டை நிலையை அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in