“இதுதானா நீங்க செலுத்துற நன்றிக்கடனா…?” மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வெடித்த டி.டி.வி.தினகரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுதானா நீங்க செலுத்துற நன்றிக்கடனா…?” மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வெடித்த டி.டி.வி.தினகரன்..!!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் உள்ளிட்ட 98-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து தங்களின் நிலம், வீடு, தொழில் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மதுரைக்கு பல்வேறு திட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்துள்ள முதலமைச்சர், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தும் கடமலைக்குண்டுவுக்குச் சென்று அவர்களைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார். இதனால், நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கின் விசாரணையில் அரசு தங்களைக் கைவிட்டுவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

“தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி தமிழக மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே தான் அரசியலுக்கு வந்ததாக”ப் பேசிய முதலமைச்சர், வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மலைக்கிராம மக்களுக்குச் செய்யும் நன்றி கடன் இதுதானா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மதுரைக்கு சென்றுள்ள முதலமைச்சர் அங்கிருந்து கடமலைக்குண்டுவுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களைச் சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, நாளை வரவுள்ள வழக்கில் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையிலான வாதங்களை எடுத்துரைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in