“யாரையும் விடாதீங்க..!” வீரமணியின் முழு வாக்குமூலம்.. ஆடிப்போன முதல்வர் விஜய் கமிஷனரிடம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை..!! – cinefeeds
Connect with us

CRIME

“யாரையும் விடாதீங்க..!” வீரமணியின் முழு வாக்குமூலம்.. ஆடிப்போன முதல்வர் விஜய் கமிஷனரிடம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை..!!

Published

on

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளியான தகவல்களால் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த குற்றச்செயல்களை மூடிமறைப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலதிபர் வீரமணி 6 முதல் 16 வயதுடைய சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய வீடியோக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவுக்கு வந்த ரகசிய புகாருடன் கிடைத்த பென்டிரைவ் தான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக மாறியது. ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியாமல் வழக்கு முடிக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதை நிராகரித்து கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

விசாரணையில், தேனாம்பேட்டையில் வீரமணி எடுத்துக்கொடுத்த வாடகை வீட்டில் சிறுமிகளைத் தங்கவைத்து, அவர்களுக்குப் படிப்பு உதவி, புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி இந்தக் கொடூரச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. வீரமணியின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, சிறுமிகளின் பாலியல் வீடியோக்களை வைத்திருந்த வீரமணியின் உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கிடைத்த தகவலின்படி சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பல்வேறு அரசியல் மற்றும் காவல் அதிகாரிகளுக்குக் கைமாறியிருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கினை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த நிதிப் பரிவர்த்தனை விவகாரத்தில் தெற்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்குச் சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பிரகாஷ் தற்போது வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜைச் சந்தித்து, வழக்கை மூடிமறைக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முயன்ற நபர்கள் மற்றும் குற்றத்தில் தொடர்புடைய எவரையும் விட்டுவிடாமல் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in