“என் மேல எந்தத் தப்பும் இல்லை சார்… வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய என்னையே குற்றவாளியாக்குவதா..?” போலீசாரிடம் அழுது புலம்பிய சாந்தி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மேல எந்தத் தப்பும் இல்லை சார்… வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய என்னையே குற்றவாளியாக்குவதா..?” போலீசாரிடம் அழுது புலம்பிய சாந்தி..!!

Published

on

‘ஜெம்’ கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காம களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவரான மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி, துணை போலீஸ் கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை பேர்?, எவ்வளவு காலம் இந்த குற்றம் நடந்தது?, வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிறுமிகளிடம் பாலியலில் ஈடுபட்ட வீடியோவை காண்பித்து வீரமணியை மிரட்டி பணம் பறித்த பின்னணியில் யார் இருக்கிறார்கள்?, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. சாந்தியின் கணவர் மகேந்திர சிம்கனிடமும் போலீசார் கேள்விகளை எழுப்பி வாக்குமூலம் பெற்றதுடன், தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றினர்.

Advertisement

இந்த விசாரணையின்போது சாந்தி மிகுந்த சோகத்துடனும் கண்ணீருடனும் காணப்பட்டுள்ளார். தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்தி விட்டீர்களே என்று போலீசாரைப் பார்த்து அவர் அழுது புலம்பியுள்ளார். வீரமணியின் எதிரிகள் யார் யார், அவர்களின் தூண்டுதலின் பேரில் இந்த விவகாரம் வெளிக்கொண்டு வரப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பல கேள்விகளுக்கு சாந்தி பதிலளித்தபோதிலும், சில கேள்விகளுக்கு அவர் மவுனமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in