LATEST NEWS
தனிப்பட்ட காரணமா..? அல்லது அரசியல் அழுத்தமா..? ஜெம் வீரமணி வழக்கில் இருந்து பெண் அதிகாரி விலகியது ஏன்..?!
ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைத் குழுவிலிருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகுவதாக தனது உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுப்பதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட இந்த 4 பேர் கொண்ட சிறப்பு விசாரணைத் குழுவிலிருந்து முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென விலகியிருப்பது அரசுத் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தையும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களையும் உருவாக்கியுள்ளது.
