அய்யோ கடவுளே..! பக்கத்து வீட்டுக்காரர்களைப் பழிவாங்க சொந்தத் தாயையே கொன்ற மகன்… போலீஸையே ஏமாற்றப் போட்ட மாஸ்டர் பிளான்..! 26 மாதங்களுக்குப் பின் அம்பலமான கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கடவுளே..! பக்கத்து வீட்டுக்காரர்களைப் பழிவாங்க சொந்தத் தாயையே கொன்ற மகன்… போலீஸையே ஏமாற்றப் போட்ட மாஸ்டர் பிளான்..! 26 மாதங்களுக்குப் பின் அம்பலமான கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் 26 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கின் உண்மையை சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. பமோரா காவல் எல்லைக்குட்பட்ட குட்டா கிராமத்தில் 2024 ஆகஸ்ட் 6 அன்று வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 55 வயதான ராம்பேட்டி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் பலியாகிப்போன பெண்ணின் மூத்த மகன் கஜேந்திரா, தங்களுக்குப் பகையாளிகளான பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது சந்தேகப்பட்டு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

காவல்துறையினர் ஓராண்டிற்கும் மேலாக விசாரணை நடத்தியும் குற்றம் சாட்டப்பட்ட பக்கத்து வீட்டினருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பரேலி மூத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை டெல்லியில் உள்ள சிபிஐ ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று உண்மை கண்டறியும் சோதனையை நடத்தியது. அந்தச் சோதனையில் அவர்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரியவந்ததால், நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

Advertisement

இருப்பினும், விசாரணையைத் தொடர்ந்து நடத்திய போலீசார், வழக்கைப் பதிவு செய்த குடும்பத்தினரின் நடவடிக்கைகளை சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, ராம்பேட்டியின் இரண்டாவது மகனான மகேந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், தனது எதிரிகளைப் பழிவாங்குவதற்காகவும் அவர்களைப் பொய் வழக்கில் சிக்க வைப்பதற்காகவும் தானே தன் தாயைக் கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து, 26 மாதங்களுக்குப் பிறகு தாய் படுகொலை வழக்கில் மகேந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in