அய்யய்யோ என்னாச்சு..! தாராபுரம் பேரணியில் திடீர்னு சைக்கிள்ல இருந்து பொத்தென கீழே விழுந்த எம்.எல்.ஏ… பதறியடித்து ஓடிய அமைச்சர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யய்யோ என்னாச்சு..! தாராபுரம் பேரணியில் திடீர்னு சைக்கிள்ல இருந்து பொத்தென கீழே விழுந்த எம்.எல்.ஏ… பதறியடித்து ஓடிய அமைச்சர்கள்..!!

Published

on

‘போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். தாராபுரத்தில் தொடங்கிய ஊர்வலம் பொள்ளாச்சி ரவுண்டானா, பொள்ளாச்சி சாலை, பூக்கடை வீதி, மீன் சந்தை வழியாக அங்குள்ள தேவாலயத்தில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவும் பங்கேற்றார். ஊர்வலம் தொடங்கியவுடன் சைக்கிளில் ஏறி சிறிதுதூரம் பயணித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜெகநாத் மிஸ்ரா, நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

Advertisement

இதனைக்கண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், த.வெ.க.வினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஓடோடி சென்று அவரை தூக்கி ஆசுவாசப்படுத்தினர். அதே நேரத்தில் ஜெகநாத் மிஸ்ராவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஜெகநாத் மிஸ்ரா, சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in