“நான் என்ன போதைப்பொருள் கடத்தினேனா?” ஏன் அதிகாலையில் அரெஸ்ட் பண்ணுறாங்க ..? நாதக வேட்பாளர் கார்த்திகா ஆவேசம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் என்ன போதைப்பொருள் கடத்தினேனா?” ஏன் அதிகாலையில் அரெஸ்ட் பண்ணுறாங்க ..? நாதக வேட்பாளர் கார்த்திகா ஆவேசம்…!!

Published

on

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேரைத் தாராபுரம் போலீஸார் அதிகாலையில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தாராபுரத்தில் நடத்திய ரோடு ஷோவின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி கார்த்திகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலீஸார் தங்களை அதிகாலை 5:30 மணிக்குத் தூங்கிக் கொண்டிருந்தபோது பலவந்தமாகக் கைது செய்ததாகக் கார்த்திகா குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் கோவை சிறைக்குக் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

அப்போது காவல்துறை வாகனத்தில் இருந்தபடி ஆவேசமாகப் பேசிய கார்த்திகா, “விடியற்காலை 3 மணிக்கு எதற்காக என்னை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறாங்க என்றே தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “நான் என்ன மெத்தபெட்டமைன் கடத்தினேனா? இல்லை போதைப்பொருள் கடத்தினேனா? எங்களை ஏன் இப்படிப் பழிவாங்குகிறார்கள்?” எனத் தவெக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கும் அரசியலைத் தீவிரமாகச் சாடினார். இந்தச் சம்பவத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in