LATEST NEWS
“ஆறாம் அறிவே இல்லாதவங்க… மில்லி லிட்டர் பாலை மீட்டர்ங்குறாரு…. பேப்பர்ல எழுதி வெச்சதக்கூட படிக்க முடியல..!” விஜய்யையும் ஆதவ் அர்ஜுனாவையும் வெளுத்து வாங்கிய TTV தினகரன்..!!
தமிழக வெற்றிக் கழகம் குறித்து காட்டமாக விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக் கட்சியின் நிர்வாகிகள் ஆறாம் அறிவே இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் தொடங்கி அனைவரின் சாயமும் வெளுப்பதைப் பார்க்க முடிகிறது என்றும், பேப்பரில் எழுதி வைத்திருப்பதைக்கூட விஜய் சரியாக வாசிக்க முடியாமல் திணறுகிறார் என்றும் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பெரிய சாக்ரடீஸ் போல பேசி வருகிறார் என்று விமர்சித்தார். மில்லி லிட்டர் பாலை மீட்டர் என்று கூறும் ஆதவ் அர்ஜுனாவுக்கு, சாதாரண பாமரர்களுக்கு தெரிந்த விஷயங்கள் கூடத் தெரியவில்லை என்றும் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
