“என்னது… பல்லு விளக்குற பிரஷ் 47 ஆயிரம் ரூபாயா..?!” அட ஆமாங்க… வாய்க்குள்ள லைவா படம் காட்டி சுத்தம் பண்ணும் அதிநவீன டூத்பிரஷ்… டாக்டர்ஸே ஷாக் ஆயிட்டாங்க… வைரலாகும் தம்பதியின் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னது… பல்லு விளக்குற பிரஷ் 47 ஆயிரம் ரூபாயா..?!” அட ஆமாங்க… வாய்க்குள்ள லைவா படம் காட்டி சுத்தம் பண்ணும் அதிநவீன டூத்பிரஷ்… டாக்டர்ஸே ஷாக் ஆயிட்டாங்க… வைரலாகும் தம்பதியின் வீடியோ..!!

Published

on

இன்றைய தொழில்நுட்ப உலகில் வியப்பளிக்கும் வகையில் பல புதிய உபகரணங்கள் அறிமுகமாகி வருகின்றன. வழக்கமாக நாம் பல் துலக்குவதற்குச் சாதாரண பிரஷ் அல்லது எலெக்ட்ரிக் டூத்பிரஷைப் பயன்படுத்துவோம். ஆனால், சோஷியல் மீடியாவில் தற்போது அதிநவீன ‘ஹை-டெக்’ டூத்பிரஷ் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. இதன் விலையைக் கேட்டால் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள். சுமார் ரூ.47,000 மதிப்பிலான இந்த பிரஷ்ஷின் விலைக்குச் சந்தையில் சுலபமாக ஒரு புதிய ஐபோனை வாங்கிவிடலாம் என்று மக்கள் கூறி வருகின்றனர்.

இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வீடியோவை @theolivetreefamily என்ற கணக்கைக் கொண்ட கடன்டண்ட் கிரியேட்டர் தம்பதியினர் பகிர்ந்துள்ளனர். டாய்சன் நிறுவனத்தின் இந்த அல்ட்ரா-மாடர்ன் டூத்பிரஷ்ஷில் சாதாரண பிரஷ்களைப் போல அதிர்வு மட்டுமே இல்லாமல், அதனுள்ளேயே கேமரா, எல்.இ.டி டார்ச் லைட், வாட்டர் ஜெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. பற்களின் ஒவ்வொரு மூலையையும் ஆழமாகச் சுத்தம் செய்ய ஏதுவாக, இந்த பிரஷ் வாயின் உட்பகுதியை லைவ் வீடியோ ஃபீட் மூலம் காண்பிக்கிறது.

Advertisement

https://www.instagram.com/reel/Dc5a7rUotDf/?utm_source=ig_web_button_share_sheet

பற்களுக்கு இடையே படிந்திருக்கும் கறைகளை மக்கள் சரியாகச் சுத்தம் செய்வதில்லை என்பதால், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஏஐ ஃபுளோசிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமராவும் சென்சார்களும் வாயின் உட்பகுதியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன, அழுக்கு இருக்கும் இடங்களில் வாட்டர் ஜெட் மூலம் அதிவேக நீர்ப் பீச்சியடித்துச் சுத்தம் செய்யலாம். இந்த வீடியோவைச் சிலர் ஸ்பான்சர் செய்யப்பட்டது எனக் கூறியதால், அந்தத் தம்பதி தாங்கள் வாங்கிய பில்களையும் பகிர்ந்துள்ளனர். “இந்த விலைக்கு ஒரு ஐபோனே வாங்கிவிடலாம்” என்றும் “பல் மருத்துவர்களுக்கே இது ஆச்சரியம் அளிக்கும்” என்றும் நெட்டிசன்கள் பல வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in