CRIME
அடக்கொடுமையே…! கூடவே இருந்து குழிபறித்த கொடூரம்… காணாமல் போன நண்பனை குடும்பத்தோடு சேர்ந்து தேடிய ‘நல்லவன்’… கடைசியில் வெளியான பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கதௌலி காவல் எல்லைக்குட்பட்ட பைன்சி கிராமத்தைச் சேர்ந்த அதுல் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 29 முதல் மாயமான நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறையின் விசாரணையில், அதுல் தனது நண்பன் சோனுவின் சகோதரி குறித்துத் தவறான அல்லது அவதூறான கருத்துகளைக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு, தனது மற்றொரு நண்பரான தாலிப் என்பவருடன் சேர்ந்து அதுலைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டான். கடந்த ஆகஸ்ட் 29 அன்று இரவு, நட்பாகப் பேசுவது போல் அதுலை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அதுலின் கழுத்தை நெரித்து, கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது உடலைக் கரும்புத் தோட்டத்தில் வீசியுள்ளனர்.
அதுல் மாயமானது குறித்துக் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இருக்கக் கொலையாளிகளான சோனுவும் தாலிப்பும் குடும்பத்தினருடனும் கிராம மக்களுடனும் சேர்ந்து தேடும் பணியிலும், காவல் நிலைய ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றுள்ளனர். எனினும், எஸ்.ஓ.ஜி மற்றும் கண்காணிப்புக் குழுவின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சோனு மற்றும் தாலிப்பைப் பிடித்து விசாரித்தபோது கொடூரமான இக்கொலை அம்பலமானது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
