CRIME
“அவன் போன் பண்ணிக்கிட்டே இருக்கான்…” 100 தடவை கால் செய்து லவ் டார்ச்சர் கொடுத்த மாணவன்.. 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காதல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி பவித்ரா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவித்ராவை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன் ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்த நிலையில், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி பாலியல் ரீதியான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த மாணவனுக்கு ஆதரவாகப் பவித்ராவின் வீட்டிற்கு அருகே வசிக்கும் மற்றொரு சிறுவனும் அவனுடன் பேசுமாறு இந்த மாணவியை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பவித்ரா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பவித்ராவின் தந்தை அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மாணவி தற்கொலை செய்து கொண்ட அன்று மட்டும் சம்பந்தப்பட்ட காதலன் பவித்ராவின் மொபைல் எண்ணிற்கு சுமார் 100 முறை போன் செய்து கடுமையான காதல் டார்ச்சர் கொடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இந்தத் தற்கொலைத் தூண்டுதல் வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இதில் தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை உடனடியாகக் கைது செய்யக் கோரி உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
