CRIME
“நீயும் செத்துரு நானும் செத்துருதேன்” காதலியை கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்து தற்கொலை.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியைக் கொலை செய்துவிட்டு 21 வயது இளைஞர் ஒருவர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த ஜி.மங்கலம் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜி.மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 21 வயது இளைஞர், திவ்யா ஜெயஸ்ரீ என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரதீப் திவ்யா ஜெயஸ்ரீயைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் உச்சக்கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீப், திவ்யா ஜெயஸ்ரீயைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
காதலியைக் கொலை செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப், சாலையில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த லாரி ஒன்றின் முன்பாக திடீரென பாய்ந்துள்ளார். இதில் லாரி மோதி பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப்பும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
