“வாயை அழுத்தி அமுக்கி..” 70 வயது மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்… 30 வயது காம மிருகத்தின் வெறிச்செயல்.. கதி கலங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வாயை அழுத்தி அமுக்கி..” 70 வயது மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்… 30 வயது காம மிருகத்தின் வெறிச்செயல்.. கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், பெங்களூருவில் பதுங்கியிருந்த 30 வயது இளைஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பண்ணந்தூர் பகுதியில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த சாமுண்டீஸ்வரி என்ற அந்த மூதாட்டி, அக்டோபர் 31ஆம் தேதி அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த பாரூர் காவல் நிலைய போலீஸார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்ற வாலிபர் அதிகாலையில் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான சூரியகுமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். விசாரணையில், மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை அழுத்திப் பிடித்ததில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட சூரியகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைப் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட பாரூர் போலீஸாருக்கு நீதிபதி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in