“அடச்சீ நீயெல்லாம் தாயா..?” கள்ளக்காதலை எதிர்த்த 14 வயது மகன்.. காதலனுடன் சேர்ந்து தாயே போட்ட ஸ்கெட்ச்.. நெஞ்சை உறைய வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் தாயா..?” கள்ளக்காதலை எதிர்த்த 14 வயது மகன்.. காதலனுடன் சேர்ந்து தாயே போட்ட ஸ்கெட்ச்.. நெஞ்சை உறைய வைக்கும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில், தாயின் கள்ளக்காதலை எதிர்த்த 14 வயது பள்ளி மாணவன் மோஹித் ராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவனது தாயே கொலைக்குச் சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சித் தகவலைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. தாராரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துர்க்பூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவனான மோஹித், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காலை பிர்ஹார் கரஹா அருகே சடலமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து பைரோ துணை காவல் கண்காணிப்பாளர் கன்ஹையா குமார் நடத்திய விசாரணையில், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கொலையின் பின்னணியில் இருந்த குடும்பச் சதி அம்பலமாகியுள்ளது.

போலீஸாரின் விசாரணையின்படி, மோஹித்தின் தாய் மானதி தேவிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சிங் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது. கணவர் வெளியூர் சென்றிருந்த சமயங்களில் சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதையும், தாயுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவதையும் மோஹித் கடுமையாக எதிர்த்து வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மகனின் இந்த எதிர்ப்பால் ஆத்திரமடைந்த மானதி தேவி மற்றும் அவரது காதலன் சந்தோஷ் ஆகிய இருவரும் சேர்ந்து மோஹித்தை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, தாயின் தூண்டுதலின் பேரில் காதலன் சந்தோஷ் மேலும் இருவருடன் இணைந்து கடந்த அக்டோபர் 27 அன்று இரவு மோஹித்தை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

இறந்த மாணவனின் தந்தை சத்யேந்திர சிங் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் குமார் சிங் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தீவிர விசாரணையில் தாயின் தொடர்பு உறுதியானதை அடுத்து, போலீஸார் மானதி தேவியைக் கைது செய்தனர். அவர் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தாராரி காவல் நிலைய தலைவர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது கைதாகியுள்ள தாயைச் சிறையில் அடைத்துள்ள காவல்துறை, தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான காதலன் சந்தோஷ் குமார் சிங் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்யத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in