“பதவியே வேண்டாம்” விசிக-வுக்குள் வெடித்த வாரியத் தலைவர் மோதல்… தன்னிச்சையாக இறங்கிய வன்னி அரசு… திருமா எடுத்த அதிரடி முடிவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவியே வேண்டாம்” விசிக-வுக்குள் வெடித்த வாரியத் தலைவர் மோதல்… தன்னிச்சையாக இறங்கிய வன்னி அரசு… திருமா எடுத்த அதிரடி முடிவு..!

Published

on

தாட்கோ வாரியத் தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள உட்கட்சி விவகாரம், தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமையிலான தற்போதைய அரசில், தாட்கோ வாரியத் தலைவர் பொறுப்பைத் தனது ஆதரவாளரான தகடூர் தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்க வேண்டும் என்று விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு தவெக தலைமையிடம் முறையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், விசிக தலைவர் திருமாவளவன் இந்தப் பொறுப்பைச் சிந்தனைச் செல்வனுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அமைச்சர் வன்னி அரசு தவெக தலைமையிடம் கோரிக்கை வைத்த இந்த நகர்வை, கட்சியின் தலைமையிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது விசிகவின் முக்கிய நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தாட்கோ வாரியத் தலைவர் பதவியின் காரணமாகக் கட்சிக்குள்ளேயோ அல்லது தவெக தலைமையிலான கூட்டணிக் குள்ளேயோ தேவையற்றப் பிரச்சினைகளும், முரண்பாடுகளும் எழும் என்றால் அந்தப் பதவியே தங்களுக்கு வேண்டாம் என்ற அதிரடி முடிவில் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வாரியத் தலைவர் பதவி யாருக்குச் செல்லும் அல்லது இந்த விவகாரம் எவ்வாறு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in