“2-வது இடத்துக்கு வந்தததையே பெருமையா பேசுறீங்க..” என்ன மாதிரியான உளவியல்ல இருக்கீங்க..? திமுகவை நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்ட திருமாவளவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2-வது இடத்துக்கு வந்தததையே பெருமையா பேசுறீங்க..” என்ன மாதிரியான உளவியல்ல இருக்கீங்க..? திமுகவை நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்ட திருமாவளவன்..!!

Published

on

உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியதையும், தமிழகத்தில் கூட்டணி அரசு உருவாகும் காலம் கனியும் எனத் தொடர்ந்து கூறி வந்ததையும் சுட்டிக்காட்டினார். அதன்படி பழம் நழுவி பாலில் விழுந்தது போல காலம் கனிந்து கூட்டணி அரசு உருவாகியிருப்பதாகவும், அதில் விசிக இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதைத் தாங்கள் திட்டமிடவோ அல்லது பேரம் பேசவோ இல்லை என்றும், கூட்டணி அரசு உருவாகி விசிகவின் மடியில் வந்து விழுந்துள்ளது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை என்பதே விசிகவின் விமர்சனம் எனக் கூறிய அவர், நம்மோடு இருக்கும் கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்க திமுக முயற்சி எடுத்திருந்தால், அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து திமுகவைக் விமர்சித்துப் பேசிய அவர், தற்போது இரண்டாம் இடம் கிடைத்ததைப் பற்றி அவர்கள் பெருமை பேசிக் கொண்டிருப்பதாகக் கூறினார். “இரண்டாம் இடம் கிடைத்தால் போதுமா, முதலிடம் வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பிய திருமாவளவன், இரண்டாம் இடத்திற்கு வந்ததையே பெருமையாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் என்ன விதமான உளவியலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in