“ஏழை மக்களின் உணவில் இப்படியா..?” எடையைக் குறைக்க ரேஷன் பொருட்களில் ஊழியர்கள் செய்த காரியத்தை பாருங்க.. ஆதாரத்துடன் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏழை மக்களின் உணவில் இப்படியா..?” எடையைக் குறைக்க ரேஷன் பொருட்களில் ஊழியர்கள் செய்த காரியத்தை பாருங்க.. ஆதாரத்துடன் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ரேஷன் கடையில் ஊழியர்கள் எடை அளவை மோசடி செய்வதற்காக அரிசி மற்றும் சர்க்கரையில் கற்களைக் கலக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேஷன் கடையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படும் அரிசியில் தலா 2 கிலோவிற்கும் அதிகமாகக் குறைத்து, எடை மோசடி செய்யப்படுவதாகப் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அதிகாரி, “வைரல் வீடியோ மற்றும் பொதுமக்களின் புகார்கள் தொடர்பாகக் குறிப்பிட்ட அந்த நியாயவிலைக் கடையில் பணிபுரியும் விற்பனையாளர் மீது துறை ரீதியான கடுமையான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். இருப்பினும், ஏழை எளிய மக்களின் உணவுப் பொருட்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in