அடக்கொடுமையே.. திடீரென பற்றி எரிந்த EV கார்.. கதறியபடியே உயிரோடு துடித்த 4 பேர்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. திடீரென பற்றி எரிந்த EV கார்.. கதறியபடியே உயிரோடு துடித்த 4 பேர்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி திடீரென தீப்பற்றி எரிந்ததில், 3 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நம்பூரு பகுதியில் நடந்த குடும்ப ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இக்கோர விபத்தில் காரில் பயணம் செய்த மற்றொரு பெண் மிக ஆபத்தான நிலையில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததால் உள்ளே இருந்தவர்களை உடனடியாகக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எலக்ட்ரிக் காரில் தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in