CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா..?” 8 சிறுவர்களின் முகத்தில் மனித மலம் பூசி சித்திரவதை செய்த கொடூரம்… காப்பாளர் தாய் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!1
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அரசு சாரா காப்பகம்ஒன்றில், 14 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள் மீது காப்பகக் காப்பாளர் மிகக் கொடூரமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஜ் தாலுகாவிலுள்ள ஒரு சிறுவர் கிராமக் காப்பகத்தில் பணிபுரிந்து வந்த லதீபா பேகம் என்ற பெண், அங்கிருந்த சிறுவர்களைச் சிறிய விஷயங்களுக்காகக் கூட மிகக் கொடூரமாக அடித்து, கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமன்றி, அவர்களின் முகத்தில் மனித மலத்தைத் தடவி சித்திரவதை செய்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த மே மாதத்தில் நடந்த இந்த கொடூரச் செயல் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், அக்டோபர் 5 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொடூரம் குறித்துக் காப்பக நிர்வாகத்திற்கு முன்பே தெரிந்திருந்தும், அவர்கள் காவல்துறைக்குப் புகார் அளிக்காமல் அந்தப் பெண்ணை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து மூடிமறைக்க முயன்றதாக நிர்வாகத்தின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியின் எழுத்துப்பூர்வமான புகாரின் பேரில், மாதப்பர் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட லதீபா பேகம் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணைக் கைது செய்யவும், இந்தச் சம்பவத்தில் காப்பக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து விசாரிக்கவும் மேற்கு கட்ச் எஸ்பி விகாஸ் சுண்டா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
