“நீ இல்லாம நான் இல்ல…” மனைவியின் விபரீத முடிவால் உடைந்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ இல்லாம நான் இல்ல…” மனைவியின் விபரீத முடிவால் உடைந்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

Published

on

திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்து விஷம் குடித்த காதல் மனைவியைத் தொடர்ந்து, அவரது கணவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி யுவராஜ் (29), அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (22) என்பவரைக் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த யுவராஜை அவரது தந்தை பாஸ்கரும், மனைவி மஞ்சுளாவும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மஞ்சுளா, வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தைக் குடித்துள்ளார். தனது மனைவி விஷம் குடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் யுவராஜும் தானும் விஷம் அருந்தியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in