CRIME
“உனக்கு நல்ல வேலை வாங்கித் தர்றேன்..!” ஆசை வார்த்தை கூறி ரயில்வே சீருடையில் வந்து 19 வயதுபெண்ணை கொடூரமாக சீரழித்த காமக்கொடூரன்.. நடுங்க வைக்கும் பின்னணி ..!!
பீகார் மாநிலம் கதிஹார் இரயில் நிலையத்தில், குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 22 அன்று வீட்டை விட்டு வெளியேறி இரயில் நிலையம் வந்த அந்தப் பெண்ணை, இரயில்வே சீருடை அணிந்திருந்த சந்தன் குமார் என்ற நபர் அணுகியுள்ளார். தான் ஒரு உதவி லோகோ பைலட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், பெண்ணுக்கு நல்ல வேலை மற்றும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருவதாக நம்ப வைத்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பரமசியா பகுதியில் தான் வாடகைக்கு தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அந்தப் பெண்ணை சந்தன் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனது நண்பர்கள் சிலரையும் போன் செய்து அந்த இடத்திற்கு வரவழைக்க முயன்றுள்ளார். இதனால் விபரீதத்தை உணர்ந்த அந்தப் பெண், எப்படியோ அறையை விட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் இளைஞர்களைப் பார்த்தவுடன், குற்றவாளி சந்தன் குமார் தனது கூட்டாளி ஒருவனுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்த அந்தப் பெண், சில நாட்களுக்குப் பிறகு மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். கதிஹார் எஸ்பி பரிச்சய் குமார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய குற்றவாளியைத் பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
