CRIME
நள்ளிரவில் வெடித்த சண்டை.. தூங்கிக் கொண்டிருந்த கணவன்.. பக்கா ஸ்கெட்ச் போட்டு மனைவி செய்த கொடூர காரியம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவன் ஸ்ரீனிவாஸ் என்பவரை அவரது மனைவி ரமாதேவி கழுத்தில் இரும்பு எடையைக் கொண்டு தாக்கிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்த இந்தத் தம்பதியினருக்கு இடையே, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நீண்ட நாட்களாகவே அடிக்கடி கடுமையான சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு வாக்குவாதம் வெடித்துள்ள நிலையில், ஆத்திரமடைந்த ரமாதேவி அதிகாலை நேரத்தில் போர்வையைப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கழுத்தில் இரும்பு எடையைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தடையங்களைச் சேகரித்து குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தத் தொடங்கினர். இதற்கிடையில், கொலைக் குற்றவாளியான மனைவி ரமாதேவி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் அதிரடியாகச் சரணடைந்தனர். இந்தத் திட்டமிட்ட கொலையின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணம் என்ன, இதில் மகனின் பங்கு ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து போலீசார் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபரீதக் கொலைச் சம்பவம் ஹைதராபாத் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
