CRIME
“அடப்பாவி மனுஷா.. 3வது கல்யாண ஆசை…” கர்ப்பிணி மனைவியை ஆற்று வெள்ளத்தில் தள்ளிய கொடூர கணவன்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மூன்றாவது திருமணம் செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தனது 3 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் ஆற்று வெள்ளத்தில் தள்ளிவிட்ட கணவனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு திருமணம் செய்திருந்த சுரேஷ் மஹதோ என்ற நபர், லக்மணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சுரேஷிற்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு மூன்றாவது திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதற்கு லக்மணி முட்டுக்கட்டையாக இருந்ததால், அவரை ஜோன்ஹா நீர்வீழ்ச்சிக்குக் கூட்டிச் சென்று தள்ளிவிட முயன்றுள்ளார்; ஆனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளால் அது முடியாமல் போயுள்ளது. அதன் பின்னர், லக்மணியை மோட்டார் சைக்கிளில் அலகாடா பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ராடு ஆற்றின் அதிவேக வெள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட லக்மணிக்கு அதிர்ஷ்டவசமாக நீச்சல் தெரிந்திருந்ததால், அவர் போராடி ஆற்றின் நடுவே இருந்த ஒரு திட்டுப் பகுதிக்கு சென்று தங்கியுள்ளார். சனிக்கிழமை இரவு முழுவதும் கொட்டும் மழையில் அந்தத் தீவிலேயே தவித்த அவரை, ஞாயிற்றுக்கிழமை காலையில் பார்த்த கிராம மக்கள் பல மணி நேரம் போராடிப் பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து வந்த அலகாடா போலீசார், பாதிக்கப்பட்ட லக்மணியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்குப் பிறகு மொபைல் போனை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள சுரேஷைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
