தம்பி விஜய்..! “ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுறாரு” இதெல்லாம் யார் பணம்.? தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தம்பி விஜய்..! “ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுறாரு” இதெல்லாம் யார் பணம்.? தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி..!!

Published

on

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “தமிழ்நாட்டில் இனி ரீல்ஸ், நாடகம், சினிமா சூட்டிங் எல்லாம் ரொம்ப நாளைக்கு ஓடாது; சினிமாவைப் பார்த்து ஏமாந்த காலம் முடிந்துவிட்டது, மக்கள் தற்பொழுது விழித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.

முன்பு ஊரான் வீட்டு நெய்யில் சுவீட் செய்யக்கூடாது என்று தவெக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, இப்போது முதலமைச்சர் விஜய் அதே பாணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட 6 கோடி ரூபாய் செலவு செய்தல், எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்கிக் கொடுத்தல் மற்றும் புதிய தவெக அலுவலகம் கட்டுதல் போன்றவற்றைச் சாடிய அவர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் ஆட்சி செய்த தலைமைச் செயலகத்தை மாற்றி, மக்கள் பணத்தில் 1,200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது இதெல்லாம் யார் பணம்..? “ஊரான் வீட்டு நெய்யில் முதலமைச்சர் விஜய் காராபூந்தி சுடுகிறார்” என்றும் விமர்சித்துள்ளார்.

Advertisement

மேலும், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு, லண்டனில் தனது நண்பரின் கார் ரேஸ் (Car Race) போட்டிக்கு முதலமைச்சர் விஜய் சென்றுள்ளதாகக் கனிமொழி எம்பி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் அரசு லண்டன் சென்று ஒப்பந்தம் போட்டதன் பின்னணியைக் கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவில் இருக்கும் நிறுவனத்திடம் இந்தியாவிலேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாமே என்றும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினால் கூட அங்குச் செய்தியாளர்களை அனுமதிப்பது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைத்தேர்தல் களம் குறித்துப் பேசிய கனிமொழி, எடப்பாடி பழனிசாமி போன்றோருக்குக் கட்சியின் தலைமை என்ற பொறுப்பு கையில் இருந்தால் மட்டும் போதும், கட்சியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்றார். பாவம் பார்த்து அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், அவர் எப்போது கட்சி தாவுவார் என்றே தெரியாது என்றும், கொள்கை உறுதியோடு இருக்கும் திமுகவிலிருந்து ஒருவரைக் கூட யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் தாராபுரம் தேர்தல் மேடையில் அதிரடியாகப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in