இரவு முழுவதும் நீடித்த பதற்றம்… விடிய விடிய தேடப்பட்ட 4 வயது பிஞ்சு.. கடற்கரையில் காத்திருந்த அந்த கோலத்தை பார்த்து கதறிய தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவு முழுவதும் நீடித்த பதற்றம்… விடிய விடிய தேடப்பட்ட 4 வயது பிஞ்சு.. கடற்கரையில் காத்திருந்த அந்த கோலத்தை பார்த்து கதறிய தாய்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 வயது சிறுமி மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசேரி ராமன்புதூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி, நேற்று தனது குழந்தைகள் கேபின் விஜோஷ் மற்றும் அலி கியானா சல்மா (4) ஆகியோருடன் கேசவன் புத்தன்துறையில் உள்ள உறவினர் விஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். மாலை நேரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்றபோது, திடீரென எழுந்த ராட்சத அலை நாவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

இதனைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாகச் செயல்பட்டு விஜி, பிரியதர்ஷினி மற்றும் சிறுவன் கேபின் விஜோஷ் ஆகிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். எனினும், 4 வயது சிறுமியான அலி கியானா சல்மாவை கடல் அலை ஆழத்திற்கு இழுத்துச் சென்றது. தகவலறிந்து வந்த கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அன்று இரவு முழுவதும் தீவிரமாகத் தேடியும் இருட்டியதால் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement

இதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மணக்குடி கடல் பகுதியில் சிறுமி அலி கியானா சல்மாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காகச் சிறுமியின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈத்தாமொழி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கிப் பலியான தன் பிஞ்சு மகளின் உடலைப் பார்த்துக் தாய் பிரியதர்ஷினி கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை நிலைகுலையச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in