“அடக் கொடுமையே..! கள்ளக்காதலனுடன் ஒடிய மனைவி..” ஆத்திரத்தில் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து கணவன் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக் கொடுமையே..! கள்ளக்காதலனுடன் ஒடிய மனைவி..” ஆத்திரத்தில் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து கணவன் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில், கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்த கணவன் ராஜேந்திரா, ஆத்திரத்தில் அவரது மூக்கை கத்தியால் அறுத்துக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திராவின் மனைவி பிரதீப் என்ற தனது கள்ளக்காதலனுடன் திடீரென வீட்டை விட்டு ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சியடைந்த கணவன் ராஜேந்திரா, பல இடங்களில் தீவிரமாகத் தேடித் தனது மனைவியைக் கண்டுபிடித்து வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் வைத்து மனைவியின் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து, கத்தியால் அவரது மூக்கை கொடூரமாக அறுத்துத் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் மூக்கு துண்டிக்கப்பட்டுக் கடுமையான ரத்தப் போக்குடன் உயிருக்குப் போராடிய அந்தப் பெண், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவத்திற்குப் பிறகு மூக்கை அறுத்த கணவன் ராஜேந்திரா தலைமறைவாகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் சீதாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in