CRIME
2 நாட்களுக்கு முன் தப்பிய உயிர்… பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள்… வீட்டில் சடலமாக கிடந்த பெற்றோர்… கடைசியாக வைக்கப்பட்ட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்… இன்சூரன்ஸ் மேலாளரின் தற்கொலை பின்னணி என்ன.??
ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூரில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலராம் மீனா (37) என்ற அந்த அதிகாரி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது வாட்ஸ்அப் பக்கத்தில் ‘அந்திம ஜோஹார்’ (இறுதி வணக்கம்) என்பது உள்ளிட்ட மூன்று ஸ்டேட்டஸ்களைப் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது வீட்டிற்குச் சென்ற நண்பர் ஒருவரே, அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட விபரத்தை முதன்முதலில் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட தம்பதியரின் அறையிலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான பணப் பரிவர்த்தனைப் பிரச்சினைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட வாழ்க்கைப் விரக்தி குறித்தும் அவர்கள் எழுதியுள்ளனர். மேலும், தங்களது தாய், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தனித்தனியாகச் சில உருக்கமான செய்திகளையும் அந்த கடிதத்தில் பலராம் மீனா குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த தம்பதியினர் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியே தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், அப்போது தங்களது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் மனம் உருகி, அந்த முடிவைக் கைவிட்டுள்ளனர். எனினும், வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக, இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விபரீத முடிவை அவர்கள் மீண்டும் எடுத்துள்ளனர் என்பது கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் நடந்த சமயத்தில், இவர்களது 4 வயது மகனும், உடன் தங்கியிருந்த அண்ணன் மகனும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தியே தம்பதியினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்போது தம்பதியரின் உடல்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், தற்கொலைக் குறிப்பில் உள்ள விவரங்கள் மற்றும் பலராமின் பணப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
