LATEST NEWS
நடுங்க வைக்கும் கொடூரம்!.. கணவனை பிணைக்கைதியாக வைத்து கள்ளகாதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பகீர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல் கதையின் விளைவாக, கணவனைப் பிணைக் கைதியாகப் பிடித்து அவரது தலையை மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து வீடியோ வெளியிட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானாவில் ஆட்டோ ஓட்டி வரும் நரேந்திரா என்ற வாலிபருக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அந்தப் பெண்ணிற்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதை நரேந்திரா கண்டுபிடித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் திட்டமிட்டு நரேந்திராவைத் தனது இரண்டாவது கணவரான முன்னா யாதவ் என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நரேந்திரா மற்றும் அந்தப் பெண்ணின் திருமண ரகசியம் இரண்டாவது கணவருக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் சேர்ந்து நரேந்திராவை ஒரு அறையில் அடைத்துப் பிணைக் கைதியாகப் பிடித்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில் நரேந்திராவின் அரைத் தலை மொட்டையடிக்கப்பட்டு, பாதி மீசையும் மழிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, அவர் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஹர்பால்பூர் போலீசார் பாதிக்கப்பட்ட வாலிபரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
