குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.. என் மேல கேஸ் இருக்கா சார்..? 30 கிலோ வெள்ளியை ஆட்டைய போட்டுட்டு… தூக்கம் வராம தானாகவே போய் மாட்டிய MCA திருடன்..!! – cinefeeds
Connect with us

CRIME

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.. என் மேல கேஸ் இருக்கா சார்..? 30 கிலோ வெள்ளியை ஆட்டைய போட்டுட்டு… தூக்கம் வராம தானாகவே போய் மாட்டிய MCA திருடன்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளிப் பாளங்களைத் திருடிய வழக்கில், சுதான்ஷு அகர்வால் என்ற MCA (கணினி பயன்பாட்டியல் முதுகலை) பட்டதாரி இளைஞனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தன் மீது போலிஸார் வழக்கு ஏதும் பதிந்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார்களா என்பதைத் தன் வழக்கறிஞர் மூலம் தெரிந்துகொள்வதற்காக சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன் தானே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளான். நீதிமன்றம் இது குறித்து ஃபீல்கானா காவல் துறையிடம் அறிக்கை கேட்டபோது போலிஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரங்களை வைத்து போலிஸார் திங்கள்கிழமை காலையில் அவனைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் ஃபீல்கானா காவல் எல்லைக்குட்பட்ட சட்டாய் மொஹால் பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள சர்ராஃபா சந்தையைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு தன் கடையிலிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள 24 வெள்ளிப் பாளங்கள் (30 கிலோ) மற்றும் ரூ.75,000 ரொக்கப் பணத்தை எடுத்து வந்து தன் வீட்டு லாக்கரில் வைத்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் மகளின் தேர்வுக்காக வெளியூர் சென்றுவிட்டார். செப்டம்பர் 18 அன்று அவர்கள் திரும்பி வந்தபோது, லாக்கரிலிருந்த வெள்ளியும் பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு சந்தேகத்திற்குரிய இளைஞன் காலியான பையுடன் சென்று, திரும்பும்போது கனமான பையுடன் முகத்தை மூடிக்கொண்டு வருவது பதிவாகியிருந்தது.

Advertisement

கைது செய்யப்பட்ட சுதான்ஷு அகர்வாலிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். அவன் கொடுத்த தகவலின் பேரில், கான்பூரின் புகழ்பெற்ற நானாராவ் பூங்காவில் பல இடங்களில் குழிதோண்டிப் புதைத்து வைக்கப்பட்டிருந்த 24 கிலோ 348 கிராம் வெள்ளியைப் போலிஸார் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்திலும் பந்தயங்களிலும் பெருந்தொகையை இழந்து, சுமார் ரூ.10 லட்சம் கடன் சுமை ஏற்பட்டதால், அந்தக் கடனை அடைப்பதற்காகவே இந்தத் திருட்டைச் செய்ததாகக் கிழக்கு மண்டல டிசிபி சத்யஜித் குப்தா தெரிவித்தார். மீதமுள்ள வெள்ளி மற்றும் பணத்தை மீட்பதற்காக போலிஸார் அவனை நீதிமன்றக் காவலில் எடுத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in