“அடக்கடவுளே தோழி என்றும் பார்க்காமல் இப்படியா..”? கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட ஆசிரியை.. குடும்பமாகச் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே தோழி என்றும் பார்க்காமல் இப்படியா..”? கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட ஆசிரியை.. குடும்பமாகச் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டி பாலம் ஒன்றின் அடியில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை சுகன்யா (35) என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து பெற்றுத் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்த சுகன்யா, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கடன் கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று கண்ணனூர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் தனது தோழி சத்யாவிடம் கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காகச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடனைத் திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் சத்யா, அவரது கணவர் துரைராஜ், மகன் விஜய் மற்றும் உறவினர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் சேர்ந்து சுகன்யாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தது அம்பலமானது. பின்னர் அவரது உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாலத்தின் அடியில் வீசியதோடு, சுகன்யாவின் வாகனத்தைக் காளிப்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்தத் திட்டமிட்ட கொலை வழக்கில் தொடர்புடைய துரைராஜ், சத்யா, விஜய் மற்றும் அவர்களது உறவினர்களான சக்திவேல், செல்வி ஆகிய 5 பேரையும் புலிவலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in