“இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணமா..?” 55 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தும் ஏழைத் தாய்க்கு நடந்த கொடுமை..! இணையத்தை உலுக்கிய வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணமா..?” 55 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தும் ஏழைத் தாய்க்கு நடந்த கொடுமை..! இணையத்தை உலுக்கிய வீடியோ..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவன் தவறுதலாக தரையை அசுசி படுத்தியதாகவும், அதனை அங்குள்ள சுகாதார ஊழியர்களை வைத்து சுத்தம் செய்வதற்கு பதிலாக, அங்கிருந்த செவிலியர் அந்த தாயையே சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேடு குறித்தும், ஏழை நோயாளிகளிடம் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்தும் தீவிரக் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜித்து பட்வாரி இந்த வீடியோவைப் பகிர்ந்து, “அரசு மருத்துவமனைகளில் போதிய ஊழியர்கள் இல்லையா அல்லது ஊழல் காரணமாக இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதா?” என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அரசுக்குக் கேள்விகளை எழுப்பிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

https://twitter.com/i/status/2109316654689849670

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், தூய்மைப் பணிகளுக்காகத் தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தினமும் 55 தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அசம்பாவிதம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவனின் உடல்நிலை தற்போது சீரடைந்து வீடு திரும்பிய நிலையில், இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in