ஊழலா..? “அரைவேக்காட்டுத்தனமா பேசாதீங்க” திமுகவின் ஊழல் புகார்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதிலடி… புள்ளிவிவரங்களுடன் பகீர் விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஊழலா..? “அரைவேக்காட்டுத்தனமா பேசாதீங்க” திமுகவின் ஊழல் புகார்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதிலடி… புள்ளிவிவரங்களுடன் பகீர் விளக்கம்..!!

Published

on

தமிழ்நாட்டில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழும் புகார்கள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தனமானவை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் மின் தேவையைப் பூர்த்தி செய்யவே சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட மின் தேவை 5,000 மெகாவாட் வரை கூடுதலாக அதிகரித்துள்ள போதிலும், தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தவெக அரசு தடுத்து வருகிறது என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள சூழலிலும், தமிழக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து வெளிப்படையான முறையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான மின்சாரத் தேவையைச் சமாளிக்கவே, ஒரு நாளைக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய திமுக அரசு, உப்பூர் மின் நிலையத்தில் ரூ. 6,000 கோடி வரை முதலீடு செய்துவிட்டு அதனை அப்படியே கைவிட்டுச் சென்றுவிட்டது என்று குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போதைய அரசு அங்கு மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்தி 5,300 மெகாவாட் மட்டுமே என்பதால், தனியாரிடமிருந்து கூடுதல் மின்சாரம் வாங்குவது கட்டாயமாகிறது என்றும், ஆந்திரா போன்ற மாநிலங்களும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 30-க்கு மேல் கொடுத்துத்தான் வாங்குகின்றன என்றும் புள்ளிவிவரங்களுடன் அவர் விளக்கியுள்ளார்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in