LATEST NEWS
நேரு தம்பி ராமஜெயம் கொலையை மறந்திட்டீங்களா..? உங்க ஆட்சியா இருந்தா சிறுமி மாயமானதை மூடி மறைச்சிருப்பீங்க… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்..!!!
“கே.என்.நேரு தம்பி கொலையாளிகளைக் கூட திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் சிறுமி காணாமல் போன விஷயத்தையே மூடி மறைத்திருப்பார்கள்” எனத் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில் தற்போதைய அரசு தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுக விமர்சனங்களுக்கு எதிராக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், கடந்த திமுக ஆட்சியில் சிறுமிகளுக்கு எதிரான பல்வேறு குற்றச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். தற்போதைய தவெக ஆட்சியில் இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை திமுக ஆட்சியில் இருந்தபோது கூட அவர்களால் துப்புதுலக்க முடியவில்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார். கொடநாடு வழக்கு முதல் பல்வேறு விவகாரங்களில் திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், செஞ்சியில் காணாமல் போனது பொதுமக்களின் குழந்தை என்றும், கடந்த 10 நாட்களாகக் காவல்துறையினர் அனைத்துக் கோணங்களிலும் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறினார். இத்தகைய சூழலில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதை விடுத்து மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே விலக வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
