LATEST NEWS
“அவர் சொல்றது சுத்த பொய்..” நிர்வாக திறனின்மையை மறைக்க கதையளக்காதீங்க… நிர்மல் குமாரை வச்சு செய்த நயினார் நாகேந்திரன்..!!
TVK ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், பாஜகவும் சதி செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது முற்றிலும் சுத்தப் பொய் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் விலைவாசி உயர்வு மற்றும் கைதிகள் தப்பியோட்டம் போன்ற முக்கியமான பிரச்னைகளை திசைதிருப்பி மடைமாற்றம் செய்வதற்காகவே தவெக கட்சியினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பேசி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்கள் எத்தனை போலி புகார்களை அடுக்கினாலும் அல்லது அழுது புலம்பினாலும் தங்களின் நிர்வாக திறனின்மையை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். அரசினுடைய செயல்பாட்டுத் தோல்விகளை மூடிமறைக்க இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
