“இது என்ன கொடுமை.. ” கல்லூரி விழாவில் சுக்குநூறாக உடைந்த சுவர்.. 16 வயது மாணவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்ன கொடுமை.. ” கல்லூரி விழாவில் சுக்குநூறாக உடைந்த சுவர்.. 16 வயது மாணவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

மங்களூருவில் உள்ள ராமா லக்ஷ்மிநாராயண் திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவின் போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். முகமது ஷாமாஜ் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், முகமது ஷனான் அகமது (18), ஹனீப் (23), தாவூத் ஃபார்சின் அகமது (18) மற்றும் முகமது ஷகீல் உசேன் (18) ஆகிய நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக அங்குள்ள ஹைலேண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், கல்லூரி நிகழ்ச்சி என்பதால் மண்டபத்தில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் திரண்டிருந்ததாகவும், கூட்ட நெரிசல் காரணமாக நடைபாதையில் நின்றிருந்த சில மாணவர்கள் அங்கிருந்த பலவீனமான சுவரில் சாய்ந்தபோது அந்தச் சுவர் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பழைய கட்டிடத்தின் முறையற்ற பராமரிப்பே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in