LATEST NEWS
உச்சகட்ட பரிதாபம்..! “அய்யோ யாராவது காப்பாத்துங்க” பாறை இடுக்கில் கத்தி கதறிய இளம்பெண்.. இந்தோனேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!
இந்தோனேசியாவின் ரிஞ்சானி எரிமலைக்கு சுற்றுலா சென்ற 26 வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியானா மரினாஸ், மலையேற்ற வழிகாட்டியால் தனியாக விடப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த மலையேற்றத்தின் போது ஜூலியானா மிகவும் சோர்வடைந்ததால், அவரை மட்டும் தனியாக ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு வழிகாட்டி மற்ற குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில், நிலைதடுமாறிய ஜூலியானா செங்குத்தான எரிமலைப் பாறையிலிருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் விழுந்துள்ளார்.
அவர் பள்ளத்தில் விழுந்த பிறகு, ட்ரோன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளில் அவர் உயிருடன் இருப்பதும், ஆபத்தான பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டு உதவிக்காகக் அலறுவதும் தெரியவந்தது. மீட்புக் குழுவினருக்கு அவர் இருக்கும் இடம் துல்லியமாகத் தெரிந்தபோதிலும், அடர்ந்த பனிமூட்டம் மற்றும் மிகக் கொடூரமான நிலப்பரப்பு காரணமாக அவரைச் சென்றடைய சில நாட்கள் ஆகியுள்ளன.
மீட்புப் படையினர் இறுதியாக அந்த இடத்தை அடைந்தபோது, ஜூலியானா ஏற்கனவே உயிரிழந்திருந்தார். பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், மலையிலிருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சி மற்றும் உள் ரத்தப்போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
