LATEST NEWS
திக் திக் காட்சி..! ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறும் 6 எரிமலைகள்… திடீர் இயற்கை சீற்றத்தால் மரண பயத்தில் ஓடிய மக்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் 6 எரிமலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நிலவரப்படி, அந்நாட்டில் உள்ள 6 வெவ்வேறு எரிமலைகள் கடுமையான சீற்றத்துடன் எரிமலைக் குழம்புகளையும், சாம்பல் புகையையும் கக்கி வருகின்றன. இந்தத் திடீர் இயற்கை சீற்றத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் மற்றும் விஞ்ஞானிகள் இந்த ஆபத்தான சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எரிமலைகள் வெடித்து வருவதால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாம்பல் புகை பல கிலோமீட்டர் உயரத்திற்கு வான்வெளியில் பரவி வருவதால், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை முழு வீச்சில் வழங்கி வருகிறது.
