CRIME
“இது என்ன கொடுமை..” மனைவி கத்தியால் 4 முறை குத்திய குடிகாரக் கணவன்.. அடுத்த நொடியே எடுத்த விபரீத முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் திரோடி நகரில், குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் உச்சகட்டமாக, குடிகாரக் கணவன் தனது மனைவி ஆர்த்தியை (28) கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் கமல் கடோதே என்பவருக்கு இருந்த கடுமையான மதுப்பழக்கம் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. கணவனின் சித்திரவதை தாங்காமல் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த ஆர்த்தி, சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு வெடித்ததில், ஆத்திரமடைந்த கமல் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து மனைவியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் 4 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆர்த்தி படுக்கையிலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை உணர்ந்த கணவன் கமல், பயத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரைப் போராடி உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கத்தங்கி எஸ்டிஓபி விவேக் சர்மா தலைமையிலான போலீசார், ரத்தக்கறை படிந்த கத்தியைக் கைப்பற்றி ஆர்த்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வரும் கமல் குணமடைந்தவுடன் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் தாயை இழந்து, தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த 3 வயதுக் குழந்தையின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
