“உன்னால்தான் என் பொண்டாட்டி வாழ வரல” ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் சரித்த மருமகன்.. மதுரையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 6 பேர் கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“உன்னால்தான் என் பொண்டாட்டி வாழ வரல” ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் சரித்த மருமகன்.. மதுரையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 6 பேர் கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்…!!

Published

on

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரான மாமனாரை, அவரது மருமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகரைச் சேர்ந்த முனியசாமி (45) என்பவரின் மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் (29) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாகக் கணவனைப் பிரிந்து தனது தந்தை முனியசாமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனது மனைவி தன்னுடன் வாழ வராததற்கு மாமனார் முனியசாமிதான் காரணம் என்று மருமகன் முருகன் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் கடந்த திங்கள்கிழமை மதுரையில் இருந்து தனது நண்பர்கள் 5 பேருடன் தூத்துக்குடிக்கு வந்த முருகன், மாமனாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், “உன்னால்தான் என் பொண்டாட்டி வாழ வரல” என்று கூறி, முருகன் மற்றும் அவரது நண்பர்கள் முனியசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த முனியசாமி நெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இக்கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்திய முத்தையாபுரம் போலீசார், தலைமறைவாக இருந்த மருமகன் முருகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான நல்லு முருகன் (24), திருமுருகன் (23), தீனதயாளன் (22), பெருமாள் என்கிற படையப்பா (26), அரவிந்த் (25) ஆகிய 6 பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in