LATEST NEWS
திமுகவின் கூடாரமா மாறும் தவெக…!” உண்மையா உழைச்ச எங்கள தூக்கிட்டாங்க… விஷமருந்தி தவெக நிர்வாகி கதறல்..!!
தவெக கட்சியானது நாளுக்கு நாள் திமுகவின் கூடாரமாக மாறி வருவதாகக் கூறி, அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் முத்துக்குமரன் பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் இத்தகைய நகர்வுகளால் தீவிர மனமுடைந்த அவர், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், ஆரம்ப காலத்திலிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னைப் போன்று உண்மையாகவும் தீவிரமாகவும் உழைத்த நிர்வாகிகளை எந்தவிதக் காரணமும் இன்றி கட்சியிலிருந்து நீக்கி வருவதாக அவர் சாடியுள்ளார். அவர்களுக்குப் பதிலாக, அமைச்சர் மதன்ராஜா தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவிகளையும் பொறுப்புகளையும் வழங்கி வருவதாகவும் முத்துக்குமரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
