LATEST NEWS
“நான் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்… அதனாலதான் போக முடியல..!” மருத்துவமனை ஆதாரத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்..!!
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றபோது உடன் செல்லாதது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலாக, தான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சென்னை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
அந்த ஆவணத்தில், அவர் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி எலும்பியல் மற்றும் மயக்கவியல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி சந்தோஷும் தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
