LATEST NEWS
பகீர்…! நிலத்தகராறில் கொதித்த இரத்தம்… நடுரோட்டில் த.வெ.க நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்… தூத்துக்குடியில் உச்சகட்ட பரபரப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் நிலவி வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பீட்டர், அம்மன்புரம் தேவாலயம் அருகே தனது பைக்கில் வந்துகொண்டிருந்தபோது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜ் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் பீட்டரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்துப் பீட்டர் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பீட்டரை தாக்கிய ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனியபாராநல்லூரைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் முத்துப்பாண்டி(21) மற்றும் பண்டாரவிளையைச் சேர்ந்த பட்டுராஜ் மகன் செந்தில்ராஜன்(19) ஆகிய 2 பேரைக் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
