LATEST NEWS
அடுத்த ஷாக்..! தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்.. அவசர ஆலோசனைக் கூட்டம் என அழைத்து… கோவை ஆட்சியரிடம் பெண் பரபரப்புப் புகார்..!!
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கருப்புசாமி மீது, அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர் மீதே இத்தகைய புகார் எழுந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி தன்னை வரவழைத்த ஒன்றியச் செயலாளர் கருப்புசாமி, தனிமையில் இருந்தபோது தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தன்னைக் கட்சியின் பெண் நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் சாதி ரீதியாகத் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
