LATEST NEWS
தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை.. ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் தலைமறைவு.. கோவையில் பரபரப்பு..!!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை காளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி சௌமியா, அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தம்மிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சாதி ரீதியாகத் திட்டியதாகவும் அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உட்பட மொத்தம் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தங்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்த கருப்பசாமி உள்ளிட்ட 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான மூவரையும் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
