LATEST NEWS
“பாதி ராத்திரியில எழுப்பி கேட்டாலும் விஜய் சொல்லும் ஒரே பதில் இதுதான்” முதல்வரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்..!!
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தவெக அரசை விமர்சித்துப் பேசினார். தவெக ஆட்சியின் மின்சாரக் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அவர் இந்த உரையை நிகழ்த்தினார். அப்போது, தவெக அரசு தங்களின் தோல்விகளை மறைக்க திமுக மீதே தொடர்ந்து பழிபோட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவரது இந்த அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாக, “பாதி ராத்திரியில் யாராவது எழுப்பிக் கேட்டாலும் விஜய் கிட்ட இருந்து வரக்கூடிய ஒரே பதில் திமுக.. திமுக.. திமுக.. என்றுதான் இருக்கும்” என நகைச்சுவையாகவும் ஆவேசமாகவும் விமர்சித்தார். முதலமைச்சர் பொறுப்பு என்பது ஒரு சாதாரண அலுவலக வேலை கிடையாது என்றும், தற்போதைய தவெக அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் அரசியல் விமர்சனங்களிலேயே மூழ்கியிருப்பதாகவும் அவர் தனது உரையில் சாடினார்.
